
பெர்லின் : ஜெர்மனி நாட்டை சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனம், கடந்த மார்ச் மாதம், இந்தியாவில் போலோ காரை அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த காரின் விலை (பெட்ரோல்) ரூ.4.42 லட்சத்தில் இருந்து ரூ.5.82 லட்சம்( எக்ஸ்ஷோரூம் டில்லி) வரை <உள்ளது. டீஸல் காரின் விலை ரூ.5.42 லட்சத்தில் இருந்து ரூ.6.82 லட்சம் வரை உள்ளது. இந்த சூழ்நிலையில், 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய சக்தி வாய்ந்த போலோ காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.6.16 லட்சம்(எக்ஸ்ஷோரூம் டில்லி). 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 15. 96 கி.மீ., மைலேஜ் தரக்கூடியது. வெளிப்புறத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், புதிய காரின் உட்புறத்தில் பல புதிய வசதிகள் இடம் பெற்றுள்ளன. புனே அருகே உள்ள சாகன் என்ற இடத்தில் வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் புதிய கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கார் உடனடியாக விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக